திருச்சி விமான நிலையத்தில் ஆணையக்குழு தலைவர் ஆய்வு


திருச்சி விமான நிலையத்தில் ஆணையக்குழு தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Sept 2021 12:51 AM IST (Updated: 30 Sept 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ஆணையக்குழு தலைவர் ஆய்வு

செம்பட்டு, செப்.30-
திருச்சி விமான நிலைய ஆணையக்குழு தலைவரும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வி.ஐ.பி. வழி, பயணிகள் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் வழிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், ரன்வே பகுதி, பழைய டெர்மினல், விமான போக்குவரத்து சிக்னல் அறை, ரேடார் அறை போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு விமான நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். முன்னதாக, போலீஸ் கமிஷனரை வரவேற்ற விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், அவருக்கு விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், விமான நிலைய ரன்வே விரிவாக்கம் குறித்தும் விளக்கி கூறினார். இந்த ஆய்வின் போது, விமான நிலைய பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் ஹரீஸ் தயாள், திருச்சி மாநகர தெற்கு துணை போலீஸ் கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர்கள் காமராஜ், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் புதுக்கோட்டை சாலையில் உள்ள சோதனை சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த பதிவேடுகளை ஆய்வு செய்த அவர், பணியில் இருந்த போலீசாரிடம், வாகன சோதனையின் போது பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள அறிவுரை வழங்கினார்.

Next Story