10 ஆண்டுகளாக நிரம்பாத பொன்னணியாறு அணை


10 ஆண்டுகளாக நிரம்பாத பொன்னணியாறு அணை
x
தினத்தந்தி 30 Sept 2021 12:56 AM IST (Updated: 30 Sept 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணை பலத்த மழை பெய்தும் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பவில்லை. எனவே தூர்வார வேண்டும் என்று ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

வையம்பட்டி, செப்.30-
வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணை பலத்த மழை பெய்தும் கடந்த 10 ஆண்டுகளாக நிரம்பவில்லை. எனவே தூர்வார வேண்டும் என்று ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கலெக்டர் ஆய்வு
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பொன்னணியாறு அணை உள்ளது. 51 அடி உயரம் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் சமீபத்தில் பெய்த மழையால் ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது. தற்போது, அணையில் 29 அடி தண்ணீர் உள்ளது.
 இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி அணையை நேற்று திருச்சி கலெக்டர் சிவராசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அணையின் உதவி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார். இதே போல் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நிரம்பாத அணை
இந்த பொன்னணியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கரூர் மாவட்டத்திலும், பாசன வசதி திருச்சி மாவட்டத்திலும் உள்ளது. பலத்த மழை பெய்தும், சுமார் 10 ஆண்டுகளாக இந்த அணை நிரம்பவில்லை. அணையில் சுமார் 10 அடிக்கு மேல் சேறும் சகதியுமாக தான் உள்ளது.
இதனால் 29 அடி நீர்மட்டம் இருந்தாலும் நீர் இருப்பு குறைவாகத்தான் இருக்கும். பலத்த மழை பெய்தும் அணைக்கு நீர் வரும் பாதை முறையாக இல்லாததால் அணையின் நீர்மட்டம் கொள்ளவை எட்டவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இந்நிலையில் நேற்று ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம்  பொன்னணியாறு அணை பாசனப்பகுதி விவசாய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிற் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில்,  பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைக்கு காவிரி நீரை குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள புதர்களை அகற்றிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பின்னர் கலெக்டர் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதைஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தையும், பதிவேடுகளையும் கலெக்டர்  ஆய்வு செய்தார். மேலும் கருங்குளம் ரேஷன்கடையில் அரிசி மற்றும் கோதுமை தரத்தையும் ஆய்வு செய்தார். பின்னர் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதை ஆய்வுசெய்தார்.இந்தஆய்வின்போது,பொதுப்பணித்துறை அலுவலர்கள், வையம்பட்டி, மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story