விபசாரத்தில் ஈடுபட்ட4 பெண்கள் மீட்பு-2 பேர் கைது


விபசாரத்தில் ஈடுபட்ட4 பெண்கள் மீட்பு-2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 1:02 AM IST (Updated: 30 Sept 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

விபசாரத்தில் ஈடுபட்ட4 பெண்கள் மீட்கப்பட்டனர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

அரியலூர்
அரியலூரில், திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ராஜவேல் மற்றும் 2 பெண் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அந்த தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். 
அப்போது 4 பெண்களை, 2 ஆண்கள் விபசார தொழிலில் ஈடுபடுத்தியது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 பெண்களையும் போலீசார் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
2 பேர் கைது
 மேலும், விபசார தொழில் செய்வதற்கு ஏஜெண்டாக செயல்பட்ட கீழப்பழுவூர் சிவன் சன்னதி தெருவை சேர்ந்த வெற்றிகண்ணன் (வயது 37), புரோக்கராக செயல்பட்ட காவலாளியான திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, கீழ அரசூரை சேர்ந்த சேகர் (55) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 இதையடுத்து விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், வருவாய் கோட்டாட்சியர் ஏழுமலை அந்த விடுதியை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், அரியலூர் தாசில்தார் ராஜமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் போலீசார் பாதுகாப்புடன் அந்த விடுதியை பூட்டி சீல் வைத்தனர்.


Next Story