கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 16 பேர் கைது


கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 16 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 1:09 AM IST (Updated: 30 Sept 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 16 பேர் கைது

திருச்சி, செப்.30-
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  கோட்டை போலீஸ் எல்லையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 41), கீழ சிந்தாமணியை சேர்ந்த லட்சுமணன் (35), கீழ தேவதானத்தை சேர்ந்த பிரபு (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காந்தி மார்க்கெட் போலீஸ் எல்லையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக எடத்தெருவை சேர்ந்த ஜெகதீசன் (47), வரகனேரியை சேர்ந்த முகமது ஹாஜீர் உசேன் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாலக்கரை போலீஸ் எல்லையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த குமார் (36) கைது செய்யப்பட்டார்.
இதுபோல ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லையில் கஞ்சா பொட்டலங்கள் விற்றதாக அம்மாமண்டபம் புதுத்தெருவை சேர்ந்த சுதாகர் (36), தெப்பக்குளம் 3-வது தெருவை சேர்ந்த ஹரிஹரசுதன் (24), சரவணன் (22), சூர்யா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரியமங்கலம் சீனிவாசன் நகர் மற்றும் நேருஜி நகர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சக்திவேல் (37), முகமது இஸ்மாயில் (28) ஆகியோரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ரமேஷ் (32), ராஜா (37, செல்வகுமார் (44), வெள்ளநிதி (34) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story