கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Sept 2021 1:10 AM IST (Updated: 30 Sept 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே சாலையடியூர் கீழத்தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 28). இவர் தென்காசி, நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டார். இதையொட்டி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், மணிகண்டன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.

Next Story