கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
விருதுநகர்,
மாவட்டத்தில் தகுதியுள்ள 16 லட்சத்து 31 ஆயிரத்து 558 நபர்களில் இதுவரை 9 லட்சத்து 48 ஆயிரத்து 303 பேருக்கு முதலாவது தவணை கொரோனா தடுப்பூசியும், 3 லட்சத்து 5 ஆயிரத்து 228 நபர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி என போடப்பட்டுள்ளது. அதாவது 59.77 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. மேலும் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக இன்றும், நாளையும் கல்லூரிகளில் கீழ்க்கண்ட விவரப்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இன்று (வியாழக்கிழமை) ராஜபாளையம் ராம்கோ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ராஜுக்கள் கலைக்கல்லூரி, எ.கே.டி.தர்மராஜா மகளிர் கல்லூரி, ஆறுமுகம் பழனிகுரு கலைக்கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம். மகளிர் கல்லூரி, பெல் இன்ஸ்டியூட் அட்சயா கல்வியியல் கல்லூரி, சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி, வத்திராயிருப்பு கலசலிங்கம் குழும கல்லூரி நிறுவனங்கள், வெம்பக்கோட்டை எஸ்.எம்.எஸ். கலைக் கல்லூரி, சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சாத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி, எஸ்.பி. கே. கலைக்கல்லூரி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி அரசுகலைக்கல்லூரி, பாலகிருஷ்ணன் கலைக்கல்லூரி, சாத்தூர் பி.எஸ்.எம்.எஸ். கல்லூரி, விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பொறியியல் கல்லூரி, கலைமகள் கலை கல்லூரி, ரமணாஸ் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாஇல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story