தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
ஆபத்தான நிலையில் மின்சார கம்பி
தர்மபுரி மாவட்ட கிராம பிரிவு மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் மின்சார கம்பி மிகவும் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்தில் ஆபத்தான நிலையில் செல்கிறது. இதுபற்றி பலமுறை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், முத்துப்பட்டி, தர்மபுரி.
===
சீரமைக்கப்படாத சாக்கடை கால்வாய்
சேலம் மாவட்டம் ஓமலூர் 14-வது வார்டு மாரியம்மன் கோவில் அருகில் சாக்கடை கால்வாய் உடைந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிறது. அது இன்னமும் சரி செய்யப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை உடனே சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் ஏதாவது நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரோஜா, ஓமலூர்.
சேலம் செவ்வாய்பேட்டை கந்தசாமி பிள்ளை 2-வது தெரு , 30-வது வார்டு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கழிவுநீருடன், மழைநீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.எஸ்.கணேசன், செவ்வாய்பேட்டை, சேலம்.
====
திறப்பு விழா காணாத நவீன கழிப்பிடம்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி 12-வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பிடம் உள்ளது. அனைத்து வேலைகளும் முடிவுற்ற நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் இந்த கழிப்பிடம் இன்னும் திறக்கப்படவில்லை. இதுபற்றி வெண்ணந்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணாத நவீன கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகனவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.
====
புதிய வழித்தடத்தில் பஸ்
கிருஷ்ணகிரியில் இருந்து வாடமங்கலம் வரை நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை வாடமங்கலத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இருமத்தூர் வரை இயக்கினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருமத்தூர் உள்பட அந்த பகுதியில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. எனவே இந்த வழித்தடத்தை (கிருஷ்ணகிரி- வாடமங்கலம்- இருமத்தூர்) அதிகாரிகள் பரிசீலனை செய்து பஸ் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், இருமத்தூர், கிருஷ்ணகிரி.
===
தெருவிளக்கு எரிவதில்லை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாசலம் புதூர் 1-வது வார்டில் கடந்த 6 மாதங்களாக ஒரே ஒரு தெருவிளக்கு மட்டும் எரிகிறது. மற்ற தெருவிளக்குகள் எரிவது இல்லை. இந்தபகுதியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு தெரு விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
-கே.மணிமன்னன், தாரமங்கலம், சேலம்.
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி 9-வது வார்டு முட்டை கடை அண்ணா நகர் காலனி முதல் தெருவில் சுமார் 2 மாத காலமாக தெரு விளக்கு சரிவர எரியவில்லை. இதனால் குழந்தைகளும், பெண்களும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கட் ராமன், அண்ணா நகர், சேலம்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொளசம்பட்டி ராஜவீதியில் உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த உயர்கோபுர மின்விளக்கை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகவேல், தொளசம்பட்டி, சேலம்.
====
எப்போது முடியும் மேம்பால பணி
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் தொப்பூர் பகுதியில் விபத்துக்களில் சிக்கியவர்களை தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஆவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுதவிர கர்ப்பிணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே இந்த மேம்பால பணி எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேம்பால பணி தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த பணிகளை முடிக்க வேண்டும்.
-தே.சக்கரவர்த்தி, தர்மபுரி.
===
வீணாகும் குடிநீர்
சேலம்- சென்னை செல்லும் முக்கிய சாலையான பொன்னம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. பல மாதங்களாக இதே நிலைமை தான் நீடிக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் பலன் இல்லை. எனவே வீணாகும் குடிநீரை தடுக்க அதிகாரிகள் புதிய தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், சேலம்.
Related Tags :
Next Story