சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 98 ஆயிரத்தை தாண்டியது


சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு  98 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 29 Sept 2021 9:07 PM (Updated: 29 Sept 2021 9:07 PM)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 98 ஆயிரத்தை தாண்டியது.

சேலம்
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 பேர், சேலம் ஒன்றிய பகுதிகளில் 19 பேர், ஆத்தூரில் 14 பேர், நகராட்சி பகுதிகளில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 
இதுதவிர சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேர், தர்மபுரி, ஈரோட்டில் இருந்து வந்த தலா 3 பேர், திருப்பூரில் இருந்து வந்த 2 பேர், திருச்சியில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிப்புள்ளாகினர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
98 ஆயிரத்தை தாண்டியது
இதன் மூலம் கொரோனா பாதிப்பு 98 ஆயிரத்தை தாண்டியது. அதாவது நேற்று வரை கொரோனாவுக்கு 98 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 62 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
763 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 64 வயதுடைய முதியவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,664 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story