4 பேர் தற்கொலை செய்த வழக்கில் 9 மாத குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது அம்பலம்


4 பேர் தற்கொலை செய்த வழக்கில் 9 மாத குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது அம்பலம்
x
தினத்தந்தி 30 Sept 2021 3:11 AM IST (Updated: 30 Sept 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

4 பேர் தற்கொலை வழக்கில் 9 மாத குழந்தை கொல்லப்பட்டது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு பேடரஹள்ளி அருகே திகளரபாளையா பகுதியை சேர்ந்தவர் சங்கர், பத்திரிக்கையாளர். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய மகள்களும், மது சாகர் என்ற மகனும் இருந்தார்கள். கடந்த 17-ந் தேதி பாரதி சிஞ்சனா, சிந்து ராணி, மதுசாகர் ஆகிய 4 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினார். சிந்து ராணியின் 9 மாத ஆண் குழந்தை கட்டிலில் பிணமாக கிடந்தது. சிஞ்சனாவின் 2 வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரும் தற்கொலை செய்ததால் 9 மாத குழந்தை பசியால் உயிரிழந்திருப்பதாக முதலில் தெரிய வந்திருந்தது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிந்து ராணியின் 9 மாத குழந்தை பசியால் சாகவில்லை என்றும், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தனது குழந்தையை கொலை செய்து விட்டு அதன் பின் சிந்துராணி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த விவகாரத்தில் 9 மாத குழந்தையை கொலை செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது.

Next Story