ரேகா கதிரேஷ் கொலை வழக்கில் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூருவில் முன்னாள் கவுன்சிலர் ரேகா கதிரேஷ் கொலையில் கணவரின் சகோதரி உள்பட 8 பேர் மீது கோர்ட்டில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் முன்னாள் கவுன்சிலர் ரேகா கதிரேஷ் கொலையில் கணவரின் சகோதரி உள்பட 8 பேர் மீது கோர்ட்டில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் கவுனசிலர் கொலை
பெங்களூரு காட்டன்பேட்டை அருகே அஞ்சனப்பா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரேகா கதிரேஷ்(வயது 43). இவரது கணவர் கதிரேஷ். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரான ரேகா பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். செலுவாதிபாளையா வார்டு முன்னாள் கவுன்சிலராக ரேகா இருந்தார். கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி அஞ்சனப்பா கார்டன் பகுதியில் வைத்து ரேகாவை 3 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருந்தனர்.
இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேகாவை கொலை செய்ததாக அவரது கணவரின் சகோதரி மாலா, பீட்டர், சூர்யா, ஸடீபன், புருஷோத்தம், அஜய், அருண்குமார், செல்வராஜ் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
கோர்ட்டில் குற்றப்பத்திரிகை
இந்த நிலையில், ரேகா கொலை தொடர்பாக பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், காட்டன் பேட்டை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் மாலா உள்பட 8 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. அத்துடன் கொலைக்கான காரணம் குறித்தும், அதற்கான ஆதாரங்களையும் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
மேலும் அடுத்த ஆண்டு(2022) நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் செலுவாதிபாளையா வார்டில் ரேகா பா.ஜனதா சார்பில் போட்டியிடுவது உறுதியாகி இருந்தது. மாநகராட்சி தேர்தலில் தனது மகள் அல்லது மருமகளை செலுவாதிபாளையா வார்டில் நிறுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரேகா உயிருடன் இருந்தால், மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத என்பதால் தீர்த்து கட்டி இருப்பது பற்றி குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருந்தது தெரியவந்தது.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதற்கிடையில், ரேகா கொலை வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் மாலா மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, மாலா மற்றும் செல்வராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story