பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது


பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 3:20 PM IST (Updated: 30 Sept 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் உதயகுமார் (வயது 24). இவர் தனது பிறந்த நாளை அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அவர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருத்தணி போலீசார் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய உதயகுமாரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

உதயகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் திருத்தணி சிறையில் அடைத்தனர்.

Next Story