மோட்டார் சைக்கிள் மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி
நொளம்பூர் சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தடுமாறி கீழே விழுந்து ஹரிஹரன் பலியானார்.
சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தன். இவர் மாதவரம் போலீசில் நெடுஞ்சாலைத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகன் ஹரிஹரன் (வயது 16). இவர் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில், ஹரிஹரன் நேற்று முன்தினம் நொளம்பூர் சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தடுமாறி கீழே விழுந்து மயங்கினார்.இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு, வானகரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்து விபத்தை ஏற்படுத்திய போரூரை சேர்ந்த ஜெயராமன் (27) காயமடைந்ததால் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story