குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 6:06 PM IST (Updated: 30 Sept 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தாராபுரம், அக்.1-
மூலனூரை அடுத்த வெங்கிக்கல்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 சிறுமியிடம் பழகி ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் மாற்றுத்திறனாளி பெற்றோர் ராஜ்குமார் மீது தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் ராஜ்குமார் மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து ராஜ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லம், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். இவருடைய பரிந்துரையின் பேரில் ராஜ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் சட்டத்தில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சிறையில் உள்ள ராஜ்குமாரிடம் கொடுக்கப்பட்டது. 



Next Story