நடு ரோட்டில் உள்ள மின்கம்பம்
நடு ரோட்டில் உள்ள மின்கம்பம்
திருப்பூர்
திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதேபோல் கடைகள், பனியன் நிறுவனங்களும் உள்ளன. இதனால் இப்பகுதியில் தினமும் அதிகமான வாகனப்போக்குவரத்து இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு கொடிக்கம்பம் என்ற பகுதியில் ரோட்டின் நடுவே ஒரு மின்கம்பம் இருப்பதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின்கம்பத்தின் அருகில் குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். நீண்ட காலமாக இந்த மின்கம்பம் நடுரோட்டில் இருந்து வரும் நிலையில் இதுவரைக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்த வழியாக கனரக வாகனங்களும் அதிகமாக செல்லும் நிலையில் நடுரோட்டில் மின்கம்பம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, வாகனங்கள் மோதி மின்கம்பம் சேதமடைவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை ரோட்டின் ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்ப்பார்களா?.
Related Tags :
Next Story