பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 30 Sept 2021 6:10 PM IST (Updated: 30 Sept 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை குரோம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரமேசின் மனைவி புவனேஸ்வரி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகனுடன் கேளம்பாக்கம் அருகே தனது உறவினர் வீட்டு சீமந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். வண்டலூர் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரமேசின் மனைவி புவனேஸ்வரி அணிந்திருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து ரமேஷ் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story