மின்மோட்டார் கேபிள்கள் திருட்டு போனதால் விவசாயிகள் அதிர்ச்சி
தளி பகுதியில் மின்மோட்டார் கேபிள்கள் திருட்டு போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தளி
தளி பகுதியில் மின்மோட்டார் கேபிள்கள் திருட்டு போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மின்மோட்டார்
தளி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்திஅணை, கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர். பாசனத்திற்கு தேவையான தண்ணீரை கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எடுப்பதற்கு விவசாயிகள் மின் மோட்டார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 20 ந் தேதி உடுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல், சண்முகவேல், ஜெயக்குமார் தங்கவேல் ஆகியோரது விவசாய தோட்டத்தில் மின் மோட்டார்களில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்கள் மர்ம ஆசாமிகளால் திருடப்பட்டது தெரியவந்தது.
அதே போன்று கடந்த 28ந் தேதி சாளையூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் காமராஜ், செல்லமுத்து விசாலாட்சி ஆகிய விவசாயிகள் தோட்டத்தில் மின்மோட்டார்களில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் சேர்த்து ரூ.62 ஆயிரத்து 500 மதிப்புள்ள 625 மீட்டர் மோட்டார்கேபிள்கள் திருடப்பட்டுள்ளது.
போலீசில் புகார்
இது குறித்து தளி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மின்மோட்டார் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் கேபிள்கள் திருட்டுபோன சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே மின்மோட்டார் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை விரைந்து பிடிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story