குப்பைகளை அகற்ற வேண்டும்
திருப்பூர் ஜீவாநகரில் உள்ள ஜம்மனை ஓடை அருகே கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர
திருப்பூர் ஜீவாநகரில் உள்ள ஜம்மனை ஓடை அருகே கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மனை ஓடை
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஜம்மனை ஓடை உள்ளிட்ட சில ஓடைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நீர்நிலைகளில் வருகிற நீர் பயன்படுத்தும் அளவிற்கு இருந்து வந்தது. ஆனால் பனியன் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மக்கள் தொகை நெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் நீர்நிலைகள் மாசடைந்தன.
பலரும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டவும் மற்றும் சாயக்கழிவுநீர் போன்றவற்றை திறந்து விடவும் பயன்படுத்தும் அளவிற்கு வந்துவிட்டது. நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் இருப்பதாலும், பராமரிக்கப்படாமல் இருப்பதாலும் பல இடங்களில் மழைக்காலங்களில் நீர் கடைமடை செல்லாது. இதுபோல் நீர்வழிப்பாதைகளில் உள்ள இடர்பாட்டால் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீரும் புகுந்தது.
குப்பைகளை
இதற்கிடையே தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் மாநகரில் நொய்யல் ஆறு பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதுபோல் ஜீவாநகர் பகுதியில் ஜம்மனை ஓடை கடந்த சில நாட்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஆனால் அந்த ஓடையின் கரைப்பகுதியில் குப்பைகளை அள்ளி அவ்வாறே வைத்துள்ளனர்.
இதனால் மீண்டும் அந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் ஓடையில் கலக்கும் நிலையே உள்ளது. ஓடை தூர்வாரியும் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும். ஓடையின் கரையை பலப்படுத்த மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story