மின்விபத்தை தவிர்ப்பது
மழை காலங்களில் மின்சார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அறிவித்துள்ளார்.
உடுமலை
மழை காலங்களில் மின்சார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அறிவித்துள்ளார்.
மின் வாரியம்
இதுகுறித்து தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எம்.ராஜாத்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் விபத்தை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வழிமுறைகள்
அதன்படி பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை கண்டால் அருகில் செல்லக்கூடாது. மேலும் மின்கம்பியானது தண்ணீரில் கிடைக்கும் பட்சத்தில் அந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாதனங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தால் மின்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஈரக் கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது மின்சாதனங்களை பழுது பார்க்க தகுதியான நபர்களை கொண்டு சரி செய்ய வேண்டும். சொந்தமாக முயற்சி செய்ய வேண்டாம். தண்ணீருக்கு அருகில் மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பின் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். பயன்பாடு முடிந்தவுடன் மின்சாதனங்களை மின் இணைப்பில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். மின்னல் மற்றும் இடியின் போது டிவி கணினி மிக்ஸி கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
மின்னல்
இடி மற்றும் மின்னலின் போது பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும்.உறுதியான கட்டிடங்கள் போன்றவற்றிற்கு செல்லலாம். தனித்துள்ள மரத்தின்கீழ் அல்லது தனித்துள்ள கூடாரங்கள் அல்லது குடிசைகளுக்குள் தங்க வேண்டாம். இடி மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டுஅகல வேண்டும். மேலும் தஞ்சமடைய மின்மாற்றிகள் மின்கம்பங்கள் மரங்கள் உலோகக்கம்பி வேலிகள் ஆகியவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
மின்னலின் போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்கக் கூடாது. வாகன போக்குவரத்தின் போது மின்கம்பி வாகனத்தின் மேல் அறுந்து கிடைக்கும் பட்சத்தில் வாகனத்திலிருந்து இறங்காமல், மற்றவர்கள் வாகனத்தை நெருங்காமல் இருக்க ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்ய வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை கண்டால் அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்களின் பயன்பாடு முடிந்தவுடன் மின் சாதனங்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். தீயை அணைக்கும் கருவியில் தெளிவாக குறிப்பிடாத பட்சத்தில் மின்சாதனங்களில் ஏற்படும் தீயை அணைக்க தீ அணைக்கும் கருவியை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக மணல் அல்லது போர்வையை பயன்படுத்துங்கள். தண்ணீரை பயன்படுத்தி மின் தீயினைஅணைக்க முயற்சிக்க வேண்டாம். சார்ட் சர்க்யூட் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்கவும். மின் கம்பத்தில் இருந்து வரும் சர்வீஸ் வயரை மரக்கிளைகள் உரசிபழுதாகாமல் பராமரிக்கவும். மிக்ஸி கிரைண்டர் போன்றவற்றை இயக்கும்போது உலர்ந்த ரப்பர் பாய்களின் மீது நிற்கவும்.மின் பாதைகளுக்கு அடியில் உள்ள மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
உயிர்காக்கும் சாதனம்
மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க உயிர்காக்கும் சாதனத்தை மெயின் சுவிட்ச் அருகில் பொருத்துங்கள். ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்துங்கள். அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் மீது வாகனங்களை இயக்காதீர்கள். மின்சாதனங்களை உபயோகிக்கும்போது சுவிட்ச்சை ஆப் செய்த பின்னரே பிளக்குகளை பொருத்தவோஅல்லது அகற்றவோ செய்ய வேண்டும். வீட்டு உபயோக மின் சாதனங்களை பயன்படுத்தும் பொழுது நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை பயன்படுத்துங்கள். சுவிட்ச் மற்றும் பிளக்கு போன்ற மின்பொருட்கள் பழுதானது கவனத்திற்கு வந்தவுடனே மாற்றவும். துணிகளை உலர வைக்க மின் இழுவை கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை தாங்கிகளாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். பி.வி.சி பைப்புகள் சுவற்றில் பதிக்கப்பட்டு வயரிங் செய்யப்பட்டுள்ள சுவர்களில் ஆணிகளை அடிக்காதீர்கள். வளர்ப்பு பிராணிகளை மின் கம்பத்திற்கு அடியில் கட்டாதீர்கள். மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்ட வேலியின் அருகே செல்லாதீர்கள். தமிழ்நாடு மின்சார வாரிய மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்ட வேலியின் அருகே சிறுநீர் கழிக்கக்கூடாது.மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டும்போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின் பாதையில் மின் தடை செய்த பின் வெட்ட வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் எளிதாக மின்சாரத்தை நிறுத்தக் கூடிய வகையில் மெயின் சுவிட்ச் உள்ளதா என ழஉறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story