சுகாதார நிலையங்களில் தடுப்பூசி


சுகாதார நிலையங்களில் தடுப்பூசி
x
தினத்தந்தி 30 Sept 2021 6:24 PM IST (Updated: 30 Sept 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் இன்று 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் இன்று 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. 
கொரோனா தடுப்பூசி 
திருப்பூர் மாநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பூசி 17 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கோவிஷீல்டு 350 பேருக்கும், கோவேக்சின் 150 பேருக்கு போடப்படுகிறது. அதன்படி அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், குருவாயூரப்பன்நகர், கோவில்வழி, எல்.ஆர்.ஜி. நியூ ராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர்காலனி பி.ஆர்.எம். ஹோம், பெரியாண்டிபாளையம், சூசையாபுரம், சுண்டமேடு, டி.மண்ணரை, டி.எஸ்.கே. காலனி, தென்னம்பாளையம் கே.வி.ஆர். காலனி வீரபாண்டி 15 வேலம்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் போடப்படுகிறது. 
பஸ் நிலையங்கள் 
இதுபோல் 1-வது மண்டலத்தில் துலாம் காதர் கார்டனில் கோவிஷீல்டு 450 பேருக்கும், கோவேக்சின் 100 பேருக்கும், 2-வது மண்டலத்தில் சத்தியா காலனியில் கோவிஷீல்டு 450 பேருக்கும், கோவேக்சின் 100 பேருக்கும், 3-வது மண்டலத்தில் கே.செட்டிபாளையம் கோவிஷீல்டு 450 பேருக்கும், கோவேக்சின் 100 பேருக்கும், 4-வது மண்டலத்தில் சூசையாபுரத்தில் கோவிஷீல்டு 500 பேருக்கும், கோவேக்சின் 100 பேருக்கும் போடப்படுகிறது. 
மேலும், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் 1000 பேருக்கும், எல்.ஆர்.ஜி.ஆர்.நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 பேருக்கும், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 300 பேருக்கு கோவிஷீல்டும், கோவேக்சின் தடுப்பூசி 400 பேருக்கும் செலுத்தப்படுகிறது. 
இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
-------


Next Story