வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2021 6:31 PM IST (Updated: 30 Sept 2021 6:31 PM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாராஜன், செயலாளர் சுகந்தி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் மங்களபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

 ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர், சப்-கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கான செலவு தொகையை உடனே வழங்க வேண்டும். 

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தேர்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட இணை செயலாளர் அக்பர் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story