குழந்தைகளுக்கு கொரோனா வராமல் தடுப்பது
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு கொரோனா வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு கொரோனா வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா 3வது அலை
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பும் மாவட்டத்தில் குறைந்துள்ளது. இதுபோல் தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்துள்ளதால், கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்களின் அச்சம் குறைந்துள்ளது. இதற்கிடையே கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என சுகாதார அமைப்புகள் சில எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் குழந்தைகளுக்கு கொரோனா வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழந்தைகள் நல டாக்டர்கள் கூறியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியதன் விளைவாக கொரோனா பரவல் இருந்தாலும், கொரோனா உயிரிழப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை கடந்தவராக, இணை நோய் உள்ளவராக உள்ளனர்.
வழிமுறைகள்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 20 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடக்க நிலையில் மருந்து மாத்திரைகளில் குணமாகி வருகின்றனர். எதிர்ப்பு சக்தி இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமங்கள் அதிகளவு இல்லை. மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இதுவரை பாதிப்பு இல்லை. குழந்தைகளுக்கு மிக நெருக்கமானவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவினால் மட்டுமே உண்டு.
எனவே குழந்தைகளுடன் இருக்கிறவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்றுவந்தால் கட்டாயம் கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story