கூலித்தொழிலாளி தற்கொலை


கூலித்தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2021 6:36 PM IST (Updated: 30 Sept 2021 6:36 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நெய்க்காரப்பட்டி:

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி நரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 34). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பூமாரி. இந்த  தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

இதனால் மனம் உடைந்த காளிமுத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

பின்னர் காளிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story