தேசிய நெடுந்தூர ஓட்ட போட்டிக்கு 10 ராணுவ வீரர்கள் தேர்வு
தேசிய நெடுந்தூர ஓட்ட போட்டிக்கு 10 ராணுவ வீரர்கள் தேர்வு
குன்னூர்
இந்திய ராணுவ வீரர்களுக்கான தேசிய அளவிலான நெடுந்தூர ஓட்ட போட்டி, உத்ரகாண்ட் மாநிலம் ராணிகேந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கிழக்கு பிராந்தியம், மேற்கு பிராந்தியம், வடக்கு பிராந்தியம், தெற்கு பிராந்தியம், மத்திய பிராந்தியம் ஆகிய 5 பிராந்திய ராணுவ வீரர்கள் பங்கு பெறுகிறார்கள். இதற்காக புனேவை தலைமையிடமாக கொண்ட தெற்கு பிராந்தியம் சார்பில் போட்டியிடும் வீரர்களை தேர்வு செய்யும் ஓட்ட போட்டி, குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள தங்கராஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
போட்டிக்கு 10 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 10 அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியிலும் தலா 6 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். போட்டியை எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்கள், உத்ரகாண்டில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story