கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்தது


கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 30 Sept 2021 7:29 PM IST (Updated: 30 Sept 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்தது

ஊட்டி

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சாய்குமார் மற்றும் அவரது உறவினர்களான சோபா, ஆரத்தி, விமல், அஸ்வதி உள்பட 6 பேர், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தனர். இங்கு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதை வழியாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை சாய்குமார் ஓட்டினார். 32-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சாய்குமார் உள்பட 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் கார் சேதமடைந்தது. தொடர்ந்து அவர்களுக்கு, கல்லட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story