மாரியம்மன் கோவிலில் 100 பூந்தொட்டிகள்


மாரியம்மன் கோவிலில் 100 பூந்தொட்டிகள்
x
தினத்தந்தி 30 Sept 2021 7:30 PM IST (Updated: 30 Sept 2021 7:30 PM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவிலில் 100 பூந்தொட்டிகள்

ஊட்டி

ஊட்டியின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆண்டுதோறும் திருவிழா மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோவிலில் புனித தன்மையை ஏற்படுத்தவும், பக்தர்களின் மன அமைதிக்காகவும் கோவில் வளாகத்தில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது. 

மேரிகோல்டு, கேலண்டுலா, புரூவில்லியா, சால்வியா ஆகிய 4 ரகங்களை சேர்ந்த 100 பூந்தொட்டிகள் நுழைவுவாயில், அலுவலக அறை, கோவில் வளாகங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மலர்களை கண்டு ரசிக்கின்றனர். 

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் முத்துராமன் கூறும்போது, தனிப்பட்ட முயற்சியால் தோட்டக்கலைத்துறை மூலம் பூந்தொட்டிகள் கோவிலில் வைக்கப்பட்டது. கோவிலில் புனித தன்மையை ஏற்படுத்த காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதனை பார்த்து செல்லும் பக்தர்கள் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். பூந்தொட்டிகளை பராமரிக்க பணியாளர் ஒருவருக்கு 15 பூந்தொட்டிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.


Next Story