பேரிடர் மீட்பு குழுவினருக்கு உபகரணங்கள்
கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில், பேரிடர் மீட்பு குழுவினருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கொடைக்கானல்:
அகில இந்திய செஞ்சிலுவை சங்க கொடைக்கானல் கிளையின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் நகர சபை தலைவருமான டாக்டர். கே.சி.ஏ.குரியன் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் தாவூது வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் புதிய துணை தலைவர்களாக எம்.கருணாநிதி கே.சி.எ.சாம்ஆபிரகாம், எம்.என்.சலாமத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஆர்.டி.ஓ. முருகேசனின் வேண்டுகோளுக்கிணங்க கோட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றி 50 பழமரங்கள் நடவு செய்து அதனை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க சுமார் ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்வது, கொரோனா தடுப்பூசி போடாத பழங்குடியினர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தடுப்பூசிகள் போடுவது, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மழை கோட்டுகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார் பழ மரங்கள் நடவு செய்வதற்கு ரூ.5 ஆயிரம் நன்கொடை வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. முருகேசனிடம் பேரிடர் மீட்பு குழுவினருக்கு மழைக்கோட்டுகளை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வழங்கினர். முடிவில் சங்க துணைச் செயலாளர்கள் சூசை ஜான், அப்பாஸ் ஆகியோர் நன்றி கூறினர்.
Related Tags :
Next Story