84 பேருக்கு கொரோனா


84 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Sept 2021 8:39 PM IST (Updated: 30 Sept 2021 8:39 PM IST)
t-max-icont-min-icon

84 பேருக்கு கொரோனா

திருப்பூர
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 24ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த  101 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 181ஆக உள்ளது. மேலும், கொரோனாவுக்கு மாவட்டம் முழுவதும் 888 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 955-ஆக உள்ளது. 
------


Next Story