சூரியகாந்தி விதை ஏலம்


சூரியகாந்தி விதை ஏலம்
x
தினத்தந்தி 30 Sept 2021 8:51 PM IST (Updated: 30 Sept 2021 8:51 PM IST)
t-max-icont-min-icon

சூரியகாந்தி விதை ஏலம்

வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பு, வியாழன்தோறும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனை கொண்டு வருவார்கள். நேற்று 105 விவசாயிகள் கலந்துகொண்டு 74 ஆயிரத்து 162 கிலோ சூரியகாந்தி விதை விற்பனை கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், மூலனூர், ஈரோடு, பகுதிகளைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ சூரியகாந்தி விதை ரூ.62.29க்கும், குறைந்தபட்சம் ரூ.54.76க்கு கொள்முதல் செய்தனர. நேற்று மொத்தம் ரூ.43 லட்சத்து 75 ஆயிரத்து 733 க்கு வணிகம் நடைபெற்றது.


Next Story