சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் சிக்கியது


சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் சிக்கியது
x
தினத்தந்தி 30 Sept 2021 9:00 PM IST (Updated: 30 Sept 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் சிக்கியது.

சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டியில் பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஜோதிமணி(வயது43) என்பவர் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வருகிறார். 
இங்கு பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி மற்றும் போலீசார் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
இதில் கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் சிக்கியது. இதுதொடர்பாக ஜோதிமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்திரப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story