‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்தவர் சுடலைமாடன். இவர் வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்துநகர் 3-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது என்றும், அதை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அதிகாரிகள் அமைத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
பஸ்கள் நின்று செல்லுமா?
பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி பஸ் நிறுத்தத்தில் மாலை நேரத்தில் சேரன்மாதேவி வழித்தடம் வழியாக செல்லும் பஸ்கள் (7 இ, 7 டி, 7 ஏ) சரிவர நின்று செல்வது இல்லை. இதுபோன்று பஸ்கள் நிற்காமல் செல்வதாலும், போதிய பஸ் வசதி இல்லாததாலும் மாலையில் கல்லூரி முடிவடைந்ததும் மாணவ-மாணவிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல வெகுநேரம் ஆகிவிடுவதால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பஸ்கள் நின்று செல்லவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இசக்கிமுத்து, சேரன்மாதேவி.
குண்டும், குழியுமான சாலை
பாளையங்கோட்ைட கீழநத்தம் தெற்கூர் கண்ணம்மன் காலனி 2-வது தெருவில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் குடிநீர், தெருவிளக்கு வசதியும் இல்லை. எனவே, இதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சுரேஷ், கண்ணம்மன் காலனி.
எலும்புக்கூடான மின்கம்பம்
பாளையங்கோட்டை பெருமாள்புரம் அன்புநகர் வாட்டர் டேங்க் 2-வது தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. ஆபத்தான அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- பாண்டியன், பெருமாள்புரம்.
உயர்கோபுர மின்விளக்கு அமையுமா?
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கலில் உள்ள கீழ பஸ்நிறுத்தம் நான்கு முக்கு சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. மிகவும் முக்கிய பகுதியான அங்கு மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- கே.எஸ்.கணேசன், கீழக்கலங்கல்.
தெருவில் ஓடும் கழிவுநீர்
கடையம் யூனியன் தங்கம்மன் கோவில் தெருவில் பல மாதங்களாக வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. வாறுகாலில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, வாறுகாலை சுத்தம் செய்து சுகாதாரக்கேட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- திருக்குமரன், கடையம்.
கல்லூரி வேண்டும்
வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலையில் 2 மேல்நிலைப்பள்ளிகளும், அதை சுற்றியுள்ள அண்ணாமலைப்புதூர், கீழக்கலங்கல், கீழவீராணம், வெங்கடேஸ்வரபுரம் ஆகிய கிராமங்களில் தனியார் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. ஆனால் இ்ங்கு கல்லூரி இல்லை. இதனால் கல்லூரிக்கு செல்ல வேண்டுமானால், சுரண்டை அல்லது ஆலங்குளத்துக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்வது குறைவாக உள்ளது. எனவே, ஊத்துமலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி அமைத்துதர வேண்டுகிறேன்.
- பெரியசாமி, அண்ணாமலைப்புதூர்.
108 ஆம்புலன்ஸ் வருமா?
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. ஆனால், இங்கு 108 ஆம்புன்ஸ் வசதி இல்லாததால், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத அவலநிலை உள்ளது. ஆகையால், இ்ங்கு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- வேம்படித்துரை, குறுக்குச்சாலை.
கழிவுநீர் கால்வாய் மீது மரப்பலகைகள்
தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மீது போடப்பட்டு உள்ள சிமெண்டு சிலாப்புகள் பல இடங்களில் உடைந்து உள்ளன. அந்த இடங்களில் தற்காலிகமாக அப்பகுதியினர் மரப்பலகைகளை போட்டு வைத்து உள்ளனர். மேலும் பெரும்பாலான நேரங்களில் அந்த தெருவின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள கழிவுநீர் தேக்க தொட்டி நிறைந்து, கழிவுநீர் வெளியேறி தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் ஓடுகிறது. எனவே, இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- லிங்கம், முத்தையாபுரம்.
Related Tags :
Next Story