கொரோனாவுக்கு முதியவர் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மாணவர் உள்பட 14 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வரை 637 பேர் இறந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638 ஆனது.
இதற்கிடையே நேற்று பிளஸ்-1 மாணவர் உள்பட மேலும் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story