ரூ.13 கோடி மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை
ரூ.13 கோடி மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை
கோவை
ரூ.13 கோடி மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளர் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ கோர்ட்டு உத்தரவிட்டது.
வீட்டு கடன் மோசடி
கோவை கவுண்டம்பாளையத்தில் கனரா வங்கியின் கிளை உள்ளது. இங்கு ரெயில்வே, கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி போன்றவற்றில் அரசு வேலையில் இல்லாதவர்களை, அங்கு பணிபுரிவதுபோல போலி ஆவணங்கள், வருமான சான்றுகளை சமர்ப்பித்து,
அவர்களுக்கு வீடுகள் கட்டிதருவதாக கூறி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த குமரன் என்பவர் சித்திரக்கனி என்ற இடைத்தரகர் மூலம் கடன்பெற்றுள்ளார்.இதற்கு வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வந்த சண்முகம் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
3 பேருக்கு சிறை
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை கடன் பெற்றுள்ளதால், வங்கிக்கு ரூ.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கனரா வங்கி கிளை சார்பில் சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிமன்றம், கனரா வங்கியின் முன்னாள் மேலாளர் சண்முகம், குமரன், சித்திரக்கனி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் சண்முகம், குமரன் ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் அபராதமும், சித்திரக்கனிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story