என்.டி.சி. ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும்
என்.டி.சி. ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும்
கோவை
தென்னிந்திய பஞ்சாலைத் தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், கோவை காட்டூரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், கடந்த 17 மாதங்களாக மூடப்பட்டுள்ள என்.டி.சி. ஆலைகளை உடனடியாக இயக்க வேண்டும். அதுவரை ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும்,
தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இந்த மாதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 5 மாநில நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து என்.டி.சி. ஆலைகளை இயக்க கோரிக்கை விடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எச்.எம்.எஸ். சங்கம் சார்பில் ராஜாமணி, ஐ.என்.டி.யூ.சி. பாலசுந்தரம், ஏ.டி.பி. சங்க கோபால், எம்.எல்.எப். சார்பில் தியாகராஜன், டாக்டர் அம்பேத்கர் யூனியன் நீலமேகம், என்.டி.எல்.எப். ரங்கசாமி, பி.எம்.எஸ். சங்க முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story