உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கிய வழக்கில் தந்தை மகன் கைது
கள்ளக்குறிச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கிய வழக்கில் தந்தை மகன் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 25-ந் தேதி ஊராட்சி ஒன்றிய 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சலேத்மேரியின் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையை தாக்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கிய வழக்கில் சலேத்மேரியின் கணவர் அந்தோணிசாமி(60), மகன் ஆரோக்கியதாஸ்(27) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story