உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 550 மதுபாட்டில்கள் பறிமுதல் 4 வாலிபர்கள் கைது
உளுந்தூர்பேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 550 மதுபாட்டில்கள் பறிமுதல் 4 வாலிபர்கள் கைது
உளுந்தூர்பேட்டை
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் எடைக்கல் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 550 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(வயது 22), சின்னசேலம் அருகே உலகியநல்லூர் தர்மா(26), அருண்குமார்(21) ஆகிய 3 பேரையும், இதற்கு உதவியாக இருந்து செயல்பட்ட அலங்கிரி கிராமம் வெங்கடேசன்(33) என்பவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story