லாட்டரி சீட்டு விற்ற விசைத்தறி உரிமையாளர் கைது


லாட்டரி சீட்டு விற்ற விசைத்தறி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 11:24 PM IST (Updated: 30 Sept 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்ற விசைத்தறி உரிமையாளர் கைது

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பேரூராட்சி பகுதியில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
அதில் வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளரான திருநாவுக்கரசு (வயது 45) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு வாங்கி வந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாட்டரி சீட்டு விற்ற திருநாவுக்கரசுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story