அன்னவாசல் சாலையில் கார் கவிழ்ந்து வயலுக்குள் பாய்ந்தது ஓட்டல் உரிமையாளர் படுகாயம்


அன்னவாசல் சாலையில் கார் கவிழ்ந்து வயலுக்குள் பாய்ந்தது ஓட்டல் உரிமையாளர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Sept 2021 11:33 PM IST (Updated: 30 Sept 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

கார் கவிழ்ந்து வயலுக்குள் பாய்ந்தது.

அன்னவாசல்:
அன்னவாசலில் ஓட்டல் நடத்தி வருபவர் முருகேசன். இவர் காரில் புதுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் அன்னவாசலுக்கு வந்துள்ளார். புதுக்கோட்டை- அன்னவாசல் சாலையில் எல்லைப்பட்டி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கவிழ்ந்து வயலுக்குள் பாய்ந்தது. இதில் கார் முன்பக்கம், பின்பகுதி நொறுங்கியது. இதில் முருகேசன் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story