நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை


நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 30 Sept 2021 11:55 PM IST (Updated: 30 Sept 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நகர் ஊரமைப்பு அலுவலகம்

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில்  மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குனரான மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். 

இந்த அலுவலகத்தில் நகரில் 4 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலத்திற்கு கட்டிட அங்கீகாரம் வழங்க லஞ்சம் கேட்பதாக  திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. 

அதை தொடர்ந்து இன்று மதியம் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அதுமட்டுமின்றி அந்த அலுவலகத்தின் எதிரில் உள்ள இடைத்தரகர்கள் அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ரூ.3 லட்சம் பறிமுதல்

சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.3 லட்சம் அந்த அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மதியம் சுமார் 1 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நடைபெற்றது. மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சோதனையினால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story