வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 1 Oct 2021 2:45 AM IST (Updated: 1 Oct 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

கீழப்பழுவூர்:

திடீர் சோதனை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாதத்தின் கடைசி நாளான நேற்று இந்த அலுவலகத்தில் அதிக அளவில் பணம் கைமாறுவதாக கிடைத்த தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் வானதி மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்களை அலுவலகத்திற்குள்ளே இருக்கச்செய்து, அலுவலகத்தின் வாயில் கதவு பூட்டப்பட்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தொகை குறித்து விசாரணை
சோதனையின்போது, அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக வசூலான தொகை குறித்து அலுவலர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையால் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story