ஆவணங்களை பார்வைக்கு வைக்க வேண்டும்
தேனி மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஆவணங்களை பார்வைக்கு வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேனி:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜோதி அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "காந்தி ஜெயந்தியையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் கிராமசபை கூட்டத்தில் வரவு, செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை, திட்ட அறிக்கை என அனைத்து ஆவணங்களையும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
கிராம நலன் கருதி மக்கள் வைக்கும் தீர்மானங்களை பதிவு செய்ய வேண்டும். தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரின் கையொப்பமும் பெற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story