9 பேருக்கு கொரோனா உறுதி


9 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 1 Oct 2021 5:46 PM GMT (Updated: 1 Oct 2021 5:46 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 356 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 5 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 935 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 65பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 356 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Next Story