3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல்


3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல்
x
தினத்தந்தி 2 Oct 2021 2:02 AM IST (Updated: 2 Oct 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி செயலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என ஊராட்சி செயலர்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர், 
ஊராட்சி செயலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என ஊராட்சி செயலர்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மாவட்ட செயற்குழு
விருதுநகரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் கணேச பாண்டியன் தலைமையிலும், மாநில துணைத்தலைவர் ராமசுப்பு, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் விமலா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராமர், தட்சிணாமூர்த்தி மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், சின்ன மாரிமுத்து, நவராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
 தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் சிறப்புரையாற்றினார். 
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை மாவட்ட செயலாளர் கே.பி.எஸ். கண்ணன் முன்மொழிந்தார். அதன் விவரம் வருமாறு:- 
ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
கால முறை ஊதியம் 
ஊராட்சி செயலர்களுக்கு மாத ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள், மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி முதல் அனைத்து பணியாளர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள அரசு கவன ஈர்ப்பு 5 கட்ட போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலர்கள், மாவட்ட வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள், அலுவலர்கள், கோவில் பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் அருணாச்சலம் வரவேற்றார். முடிவில்  ஒன்றிய செயலாளர் பாண்டிக்குமார் நன்றி கூறினார்.

Next Story