போலீசாருக்கு மிரட்டல்; 2 பேர் கைது


போலீசாருக்கு மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 2:32 AM IST (Updated: 2 Oct 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் போலீசாரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்:
சீதபற்பநல்லூர் போலீசார் நாகேஸ்வர ராவ், கணேசன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த மற்ற போலீசார் இணைந்து தப்பியோடிய வாலிபர்களை தேடி கைது செய்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், வல்லவன்கோட்டையை சேர்ந்த பெருமாள் மகன் சிவசுரேஷ் (வயது 19), ஸ்ரீதர் மகன் அபினேஷ் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான இருவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும், ரவுடி பட்டியலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story