புரட்டாசி 3-வது சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து சென்ற வண்ணம் உள்ளனர். அந்தவகையில், நேற்று காலை புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால், தேவநாத சுவாமிக்கு காலையில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
முன்னதாக ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால் அவர்களை கோவில் நுழைவு வாயில் அமைந்திருக்கும் பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, அனுமதிக்க மறுத்தனர்.
ஆற்றங்கரையில் வழிபாடு
இதனால், கோவில் பின்பகுதியில் இருக்கும் கெடிலம் ஆற்றில் பக்தர்கள் திரண்டு, மொட்டை அடித்து, ஆற்றில் நீராடி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சென்றனர்.
உடன் அந்த பகுதிக்கு சென்ற போலீசார், ஆற்றுப்பகுதியில் மொட்டை போடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story