கொரோனாவை கட்டுப்படுத்திட அனைவரும் பாடுபட வேண்டும்
கொேரானாவை கட்டுப்படுத்திட அனைவரும் பாடுபட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார்.
திருவெண்காடு:
கொேரானாவை கட்டுப்படுத்திட அனைவரும் பாடுபட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார்.
கிராம சபை கூட்டம்
சீர்காழி அருகே செம்பதனிருப்பு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகண்ணன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன், தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் வரவேற்றார்.
இதில் மாவட்ட கலெக்டர் லலிதா கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-.
கொரோனா
மயிலாடுதுறை மாவட்டம் சிறப்பான வளர்ச்சி பெற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்திட அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
செம்பதனிருப்பு ஊராட்சியில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு ஊராட்சி மன்ற தலைவர், சுகாதாரத்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியோரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தென்னை கன்றுகள்
இதில் சீர்காழி உட்கோட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி, ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் கலையரசன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் 2 உள்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வேளாண்மைத்துறை மூலம் தென்னை கன்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் திலகவதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story