ஓய்வு பெற்ற கலெக்டர் மின்சாரம் தாக்கி பலி


ஓய்வு பெற்ற கலெக்டர் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 3 Oct 2021 9:33 PM IST (Updated: 3 Oct 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற கலெக்டர் பரிதாபமாக இறந்தார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற கலெக்டர் பரிதாபமாக இறந்தார்.

ஓய்வு பெற்ற கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 70). இவர் நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றியுள்ளார். 

மேலும் வணிக வரித்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் வடக்குபட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று வடக்குபட்டு கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கொய்யா செடிகள் மற்றும் கொய்யாமரங்களை சுந்தரமூர்த்தி பராமரிப்பு செய்து கொண்டிருந்தார். 

மின்சாரம் தாக்கி பலி

அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு கொய்யா மரத்தில் மின்கம்பி உரசிக்கொண்டு இருந்தது. அதில் மின்கசிவும் ஏற்பட்டிருந்தது. 

அந்த கொய்யாமரத்தை தொட்டபோது அதில் எற்கனவே ஈரம் இருந்ததால் கசிந்த மின்சாரம் சுந்தரமூர்த்தி மீது பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். 
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இநத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரது மகன் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story