கார் மோதியதில் குதிரை சாவு
சுத்தமல்லி அருகே கார் மோதியதில் குதிரை பரிதாபமாக இறந்தது.
பேட்டை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த அச்சன்புதூரை சோ்ந்தவா் முகமது ரசீது (வயது 44). இவா் வாடகை காா் ஓட்டி வருகிறாா். நேற்று மாலை நெல்லையில் இருந்து கடையநல்லூருக்கு தனது காாில் சென்று கொண்டு இருந்தாா். சுத்தமல்லியை அடுத்த பழவூா் அருகே சென்றபோது எதிா்பாரதவிதமாக சாலையின் குறுக்கே வந்த குதிரை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சம்பவ இடத்திலேயே குதிரை பலியானது. அதிா்ஷடவசமாக காாில் வந்த அனைவரும் எந்தவித காயம் இன்றி தப்பினா். தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீசாா் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாாித்து வருகின்றனா்.
Related Tags :
Next Story