அரசு உண்டு உறைவிட பள்ளியில் 17 மாணவிகளுக்கு கொரோனா
சிக்கமகளூரு அருகே அரசு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 17 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிக்கமகளூரு: சிக்கமகளூரு அருகே அரசு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 17 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு உண்டு உறைவிட பள்ளி
சிக்கமகளூரு தாலுகா சரப்பனஹள்ளி கிராமத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இந்த உண்டு உறைவிட பள்ளியில் 175 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் காய்ச்சலால் அவதிப்பட்டனர்.
இதையடுத்து 3 மாணவிகளையும் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள் 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 3 மாணவிகளுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உண்டு உறைவிட பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளின் சளி, ரத்த மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மக்கள் பீதி
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாணவிகளின் பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அதில் மேலும் 14 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது 14 மாணவிகளும் உண்டுஉறைவிட பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வேனு என்பவர் தெரிவித்துள்ளார்.
உண்டு உறைவிட பள்ளியில் 17 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சக மாணவிகள் மற்றும் சிக்கமகளூரு பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story