தொழிலாளியை வெட்டியவர் போலீஸ் நிலையத்தில் சரண்


தொழிலாளியை வெட்டியவர் போலீஸ் நிலையத்தில் சரண்
x
தினத்தந்தி 5 Oct 2021 12:16 AM IST (Updated: 5 Oct 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை வெட்டியவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

திருப்புவனம், 
திருப்புவனம்  கீழச்சொரிக்குளம்  கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி அழகு. கீழச்சொரிக்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக அழகு வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவரை நீக்கிவிட்டு இதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஈஸ்வரனின் மனைவி சித்ரா என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கும், மீனாட்சிசுந்தரத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் தனது வீட்டின் அருகே இருந்தபோது அங்கு வந்த மீனாட்சிசுந்தரம் அரிவாளால் ஈஸ்வரனை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஈஸ்வரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஈஸ்வரனின் மனைவி சித்ரா பழையனூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். இதற்கிடையில் தப்பி ஓடிய கூலித்தொழிலாளி மீனாட்சிசுந்தரம் கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் பழையனூர் போலீசார் மேல்விசாரணை செய்துவருகின்றனர்.

Next Story