வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம்- நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி நாகம்மாள்(வயது 36). ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நாகம்மாள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.
நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மற்றொரு வீட்டில்...
இதேபோல் அதே தெருவை சேர்ந்த சின்னராசு(60) என்பவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நகை, பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசில் நாகம்மாள் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகைகளை பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story